×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

விக்கிரவாண்டி, அக். 1: ரெட்டணையில் இணையவழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா ஏற்பாட்டில் கூட்டேரிப்பட்டு, ரெட்டணை கிராம பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளைஞர்களையும், புது உறுப்பினர்களையும் ஈர்க்கும் வகையில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை மற்றும் கலைஞரின் பொற்கால ஆட்சியில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட சாதனை திட்டங்கள் அடங்கிய எல்இடி காணொலி  பிரச்சார வாகனத்துடன், இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடந்தது. முகாமில் 200க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு செஞ்சி சிவா உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் மலர்மன்னன், வசந்தா, வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு அன்சாரி, மாவட்ட இலக்கிய அணி சாரங்கபாணி, கிளை செயலாளர்கள் ரவி, பழனி, கன்னியப்பன், கிஷோர், குமார், வழக்கறிஞர் விஜயன், நிர்வாகிகள் ஆனந்தன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Admission Camp ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்