தூத்துக்குடி மீனவர் கொலையில் முக்கிய குற்றவாளி கைது

தூத்துக்குடி, அக்.1: தூத்துக்குடியில் மீனவர் கொலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மேட்டுபட்டியை சேர்ந்தவர் கோபுரத்தான் மகன் காளிமுத்து(40). மீனவரான இவர் கடந்த 1ம் தேதி அதிகாலை அப்பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில் வடபாகம் போலீசார் கொலை  வழக்காக மாற்றி  பதிவு செய்து விசாரித்து வந்தனர்.  இந்நிலையில் இதில் தொடர்புடைய  திரேஸ்புரத்தை சேர்ந்த வேதரபேக் (21), லிவிங்ஸ்டன்(25), லூர்தம்மாள்புரம் மரியஜெர்மன் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான தொம்மையார் கோயில் தெரு மீனவர் கிஷ்ஷிங்கர்(28) என்பவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் வடபாகம் இன்ஸ்பெக்டர் அருள், எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் இரவு  கிஷ்ஷிங்கரை கைது செய்தனர். மேலும் காட்வின் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>