×

இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி பொறுப்பேற்பு திருவண்ணாமலை சேஷாத்திரி ஆஸ்ரம

திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை மகான் சேஷாத்திரி ஆஸ்ரமத்தின் இடைக்கால நிர்வாகியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் பொறுப்பேற்றார். திருவண்ணாமலையில் உள்ள மகான் சேஷாத்திரி ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில், நிதி நிர்வாக கணக்குகள் முறையாக பராமரிக்கவில்லை, முறைகேடுகள் நடந்திருக்கிறது என பிரகாஷ் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணை விரைவாக நடைபெறவில்லை என்பதால், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதன்படி, ஆஸ்ரம நிர்வாகி முத்துகுமாரசாமி மீது வழக்குப்பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணை நடத்தியது.

மேலும், ஆஸ்ரம வங்கிக்கணக்குகளையும் முடக்கி வைத்தது. எனவே, வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால், ஆஸ்ரமத்தை நிர்வகிக்க முடியவில்லை என ஆஸ்ரமம் தரப்பில் ேகார்ட்டில் முறையிட்டனர். அதனால், ஆஸ்ரமத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதனை நியமித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மகான் சேஷாத்திரி ஆஸ்ரம இடைக்கால நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன், நேற்று பொறுப்பேற்றார். இவர், 3 மாதங்கள் வரை பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Retired Judge ,Seshadri Ashram ,Thiruvannamalai ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...