×

சாகும் வரை உண்ணாவிரதமிருந்த விவசாய சங்க தலைவர் கைது

திருவெறும்பூர், அக்.1: திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் அரைவட்ட சாலை பணிக்காக கே.சாத்தனூர், பெரியகுளம், காரைக்குளம், சூரியூர் எலந்தப்பட்டி, பழங்கனாங்குடி, துவாக்குடி, பெரியகுளம், பரந்தான்குளம் ஆகிய குளங்களில் வழியே சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், வல்லுநர் குழு, தேசிய சுற்றுச்சூழல் குழுக்களின் வழிகாட்டலுக்கு எதிரானது. இதற்கு காரணமான நெடுஞ்சாலை காரைக்குடி திட்ட இயக்குனர், திருச்சி கலெக்டர், மண்டல தலைமை பொறியாளர், காவிரி வடிகால் கோட்ட பொறியாளர், மாயனூர் நிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆகியோரை கண்டித்தும், உயர்நீதிமன்ற மதுரை கிளை தூர்க்கப்பட்ட ஏரி, குளங்களை காப்பாற்றி உதவிட வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில், சமூக ஆர்வலர் சம்சுதீன் ஆகியோர் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் பரந்தான் குளம் பகுதியில் சாகும் வரை தண்ணீர் அருந்தா உண்ணாவிரத போராட்டத்தை நேற்று காலை துவக்கினர்.

தகவலறிந்த டிஎஸ்பி., சுரேஷ்குமார், துவாக்குடி இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் தாசில்தார் ஞானாமிர்தம் ஆகியோர் விரைந்து வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சின்னதுரை அதற்கு ஒத்துக் கொள்ளாமல் குளங்களைத் தூற்று சாலை அமைத்தது தவறு என்றும், அதனால் குளங்களை உடனடியாக தூர் வார வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட முடியாது என்று கூறியதால் அவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். அப்போது சின்னதுரை, இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை என்றால் அக்.2ம் தேதி காந்திஜெயந்தி அன்று தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Arrest ,union leader ,death ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...