×

விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி மையம் துவக்கம்

திருச்சி, அக். 1: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்பட 10,906 பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரில் தேர்விற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவிடும் வகையில் திருச்சி மாநகர காவல் அலுவலக வளாகத்தில் கடந்த 27ம் தேதி முதல் விண்ணப்பதாரர்களுக்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை மாநகர கமிஷனர் லோகநாதன் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக துவக்கி வைத்தார்.

இந்த உதவி மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை காவலர்கள் பணியில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு ஆலோசனை வழங்கி உதவி செய்து வருகின்றனர். இந்த உதவி மையம் வரும் 26ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். தேர்விற்கு இணையதளம் (www.tnusrb.org) மூலமாக கணினியில் விண்ணப்பம் செய்வது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அல்லது உதவிகள் தேவைப்பட்டால் திருச்சி மாநகர கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உதவி மையத்திற்கு நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். நேரில் வரமுடியாதவர்கள் 94981-56419, 94982-14544 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு மாநகர கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Launch ,Applicants ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!