×

காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

பெரம்பலூர், அக்.1: நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படுவதாக கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை (2ம் தேதி) மூடப்படுகின்றன. மேலும் எப்.எல் 2 மற்றும் எப்.எல் 3 உரிமம் பெற்ற மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

Tags : stores ,Tasmag ,
× RELATED டாஸ்மாக் கடைகளுக்கும் நாளை விடுமுறை...