×

வி.கைகாட்டி பகுதியில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம்

அரியலூர், அக். 1: அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணியாதவர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் விதிக்க கலெக்டர் ரத்னா, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் ஆணையிட்டனர். இதையடுத்து நேற்று வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் உதவியுடன் அரியலூர் தாசில்தார் சந்திரசேகரன், ஆர்ஐ ராமசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் தலா ரூ.200 அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடை உரிமையார்கள், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5,000 வரை என மொத்தம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் கொரோனா விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு ரூ.5000 அபராத்துடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். பிடிஓக்கள் தமிழரசு, நாரயணன், சுகாதார மேற்பார்வையாளர் தர்மலிங்கம் உடனிருந்தனர்.

Tags : area ,V.Kaikatti ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி