அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 1:கரூர் அரசு போக்குவரத்து கழக பனிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ கிளை நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.போக்குவரத்து கழகத்துக்கு தேவையான நிதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி:  அரவக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், தொழிலாளர் சொந்த விடுப்பை கழிக்ககூடாது, ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு பணப்பலனை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அரவக்குறிச்சி அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏஐடியூசி மாநில சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், சி.ஐடியூ செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 25 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>