போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீருடை பணியாளர் தேர்வு உதவி மையம் திறப்பு

திருப்பூர், அக். 1: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சீருடைப்பணியாளர் தேர்வுக்கான உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இணையதளம் மூலமாக செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26ம் தேதி வரையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு உதவும் வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேர்வு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆகவே, விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தேர்வு உதவி மையத்தை நேரிலோ அல்லது 94981-81332 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த உதவிமையமானது அக்டோபர் 26ம் தேதி வரையில் காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் செயல்படும். இவ்வாறு போலீஸ் கமிஷ்னர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>