×

நோய் தாக்காமல் இருக்க காய்கறி பயிர்களுக்கு மருந்து தெளிப்பு

ஊட்டி, அக்.1: ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க காய்கறி பயிர்களுக்கு மருந்துகள் தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிப்படுகிறது.  
கடந்த இரு மாதங்களாக நல்ல மழை பெய்த நிலையில், ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, சாந்தூர், கொல்லிமலை, கோலனிமட்டம், முத்தோரை பாலாடா, கல்லக்கொரை ஆடா உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பூண்டு உள்ளிட்டவற்றை அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள காரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களுக்கு கருகல் நோய், வாடல் நோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மாறி வரும் பருவநிலை காரணமாக உருளைக்கிழங்கு பயிர்களுக்கும் நோய் தாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மகசூல் பாதிப்பை தவிர்க்கும் வகையில் விவசாயிகள் நோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தெளிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Spraying ,
× RELATED கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள்...