×

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முகக் கவசம் விநியோகம்

வால்பாறை, அக். 1:  தமிழ அரசு உத்தரவுப்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மாத்திரைகள், முகக்கவசம் உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. வால்பாறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முகக்கவசம் வழங்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. வால்பாறை ஸ்டான்மோர் சந்திப்பு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சியை வால்பாறை கூட்டுறவு வங்கி தலைவர் அமீது மற்றும்  துணை தலைவர் மயில் கணேசன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. பாசறை இணைச்செயலாளர் சலாவுதீன், அ.தி.மு.க. பேரவை மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் நரசப்பன், நிர்வாகிகள் ஜேம்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி