×

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

ஈரோடு, அக்.1: காந்தி ஜெயந்தியையொட்டி ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.2ம் தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மணிமொழி, டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடைப்பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : holiday ,Tasmac ,stores ,
× RELATED செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம்...