×

கோழிப்பண்ணைகளில் இருந்து ஊருக்குள் படையெடுக்கும் ஈக்களால் நோய் அபாயம் பொதுமக்கள் பீதி

நாமகிரிப்பேட்டை, அக்.1: நாமகிரிப்பேட்டை மற்றும் அருகில் உள்ள உள்ள ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வெள்ளக்கல்பட்டி, அக்காலம்பட்டி, ஆர்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. கோழிப்பண்ணைகளில் ஈக்கள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து ஊருக்கு படையெடுப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பண்ணைகளை சரியாக பராமரிக்காததால், ஈக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. அங்கிருந்து குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் ஈக்கள், உணவு பொருட்களின் மீது அமர்வதால் உருவாகும் கிருமிகள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஈக்களினால் மர்ம நோய் பரவுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.எனவே, கோழிப்பண்ணைகளில் இருந்து படையெடுக்கும் ஈக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : panic ,poultry farms ,city ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!