×

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 342 கன அடியாக அதிகரிப்பு

ஓசூர், அக்.1: தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 160 கனஅடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து 248 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 38.80 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து 114 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று 342 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 114 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 41.30 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

Tags : KRP Dam ,
× RELATED கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி