×

சர்வேயர் இல்லாததால் பட்டா வாங்க முடியல

அருப்புக்கோட்டை, அக். 1: அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நில அளவை பிரிவு உள்ளது. நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீட்டுமனை பிரிவுகளுக்கு அளந்து கொடுத்தல், இடங்கள் சம்பந்தமாக புல எண் வாங்குதல், எல்எல்ஆர் வாங்குதல், எஸ்எல்ஆர் வாங்குதல், வார்டுபிளாக் எண் பெறுதல் உட்பட பணிகளுக்கு சர்வேயர் அவசியம் தேவை. ஏற்கனவே இந்தப் பிரிவில் இருந்த சர்வேயர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு லஞ்ச வழக்கில் கைதாகியுள்ளார். அதற்கு பின் நியமிக்கப்பட்ட சர்வேயர் விடுப்பில் சென்றுவிட்டார்.

இதனால் நில சம்பந்தமாக அளக்கும் பணிகள் பல இடங்களில் நடைபெறாமல் உள்ளது. இதனால் எல்எல்ஆர் டவுன் சர்வே பட்டா வாங்க முடியாமல் பத்திரப்பதிவு செய்யமுடியவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சர்வேயர் இல்லாததால் இடம் சம்பந்தமாகவும் சர்வே வரைபடம் வாங்க முடியவில்லை. ஆவணத்தில் உள்ள அளவுக்கும் இடத்தில் உள்ள அளவுக்கும், அளப்பதற்கு சர்வேயர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது அளவை கூடுதல், குறைவாகப் போட்டு பதிவுசெய்து வருகின்றனர். இதனால் மீண்டும் சீர்திருத்தப்பத்திரம் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் டவுன் சர்வேயர் பொறுப்பேற்க தயங்குகின்றனர். எனவே, காலியாக உள்ள டவுன் சர்வேயர் பணியிடத்திற்கு சர்வேயரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திருச்சியில் இருந்து கரூர் வரை...