×

மழை வேண்டி முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி, அக்.1:  பரமக்குடி பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். கிராமங்களில் மழை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான கிராமங்களில் முளைப்பாரி திருவிழா நடத்தவில்லை. சில கிராமங்களில் தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அரியனேந்தல், பொட்டிதட்டி, செம்மனூர், பார்த்திபனூர் இடையர் குடியிருப்பு உள்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் தலையில் பாரியை சுமந்தபடி வலம் வந்து கோயிலின் முன்பு வைத்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். ஆண்கள் ஒயிலாட்டம் ஆடினர். பின்பு மறுநாள் மாலையில், மீண்டும் முளைப்பாரி எடுத்துச் சென்று வெட்டப்பட்டிருந்த குளங்களில் கொட்டினார். அரியனேந்தல் கிராமத்தில் நடந்த முளைப்பாரி திருவிழாவில் யூனியன் துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், ஊராட்சி துணை தலைவர் பாப்பா சிவகுமார், கிராமத்தலைவர் ராமு, செயலாளர் சௌந்தர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது