×

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுக்கடைகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக கலெக்டர்கள் காஞ்சிபுரம் பொன்னையா, செங்கல்பட்டு ஜான்லூயிஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சி, செங்கை மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை, டாஸ்மாக் கடைகள் அதனுடன் இணைந்த  பார்கள், அயல்நாட்டு மதுபான கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தனியார் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Liquor stores ,Gandhi Jayanti ,
× RELATED தமிழகத்தில் இதுவரை எத்தனை மதுபான...