×

ஐடி நிறுவன மேலாளர் வீட்டில் 35 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி:  கூடுவாஞ்சேரி அருகே ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி, மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லோகநாதன் (26). சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (22). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த வாரம் புவனேஸ்வரி, குழந்தைகளுடன் கொடுங்கையூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். லோகநாதன் மட்டும் தனியாக இருந்தார். கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வர லோகநாதன் கொடுங்கையூர் சென்றார். நேற்று முன்தினம் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, அவரது வீட்டின் கிரீல் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் உள்பட அனைத்து பொருட்களும் வெளியே சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் வைத்திருந்த 35 சவரன் நகை, 15 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். தகவலறிந்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் வந்து, அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த கூவத்தூரை சேர்ந்தவர்கள் விஜி (30), ரஞ்சித் (29), தேவராஜ் (32). கடந்த சில  மாதங்களுக்கு முன், கூவத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அங்குள்ள ஊழியர்களிடம்,  ரூம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு, ஊழியர்கள் மறுத்ததால், அவர்களை தாக்கிவிட்டு தப்பினர். புகாரின்படி, கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வந்தனர். இந்நிலையில், கூவத்தூர் பகுதியில் உள்ள மறைவான இடத்தில், 3 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ அசோகசக்கரவர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள், தப்பியோடினர். உடனே போலீசார், சுமார் 4 கிமீ தூரம் அவர்களை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர்.

Tags : shaving robbery ,IT company manager ,house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்