×

60 கிலோ குட்கா பறிமுதல்: வியாபாரி கைது

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக குன்றத்தூர் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் போலீசார், நந்தம்பாக்கம், பாரதி நகரில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சுடலைவேல் (47) என்பவரது கடையில், குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 60 கிலோ  குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 1 லட்சம் என கூறப்படுகிறது.

Tags : Trader ,
× RELATED வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில்...