டிராக்டர் மோதி துணை பிடிஓ பலி

பெரணமல்லூர், செப்.30: பெரணமல்லூர் பிடிஓ அலுவலகத்தில், மண்டல துணை பிடிஓவாக பணிபுரிந்து வந்தவர் சேகர்(58). இவர் கடந்த 8ம் தேதி, ஆரணியில் இருந்து பெரணமல்லூருக்கு பணியிட மாறுதல் பெற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், நேற்று மடம் கிராமத்தில், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ய, மண்டல துணை பிடிஓ சேகர் தனது பைக்கில் புறப்பட்டு சென்றார். ஆளியூர் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த சேகர் கடந்த ஜூன் மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59ஆக உயர்த்தியதால், அவர் தொடர்ந்து பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>