×

வீடு புகுந்து திருட்டு

நாசரேத்,செப்.30:நாசரேத் அருகே கச்சனாவிளை- ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பட்டாணி மகன் ரத்தினவேல் (32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் நாலுமாவடி பாதகரைசுவாமி கோயிலுக்கு சென்று விட்டு மதியம் 2மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த மூன்றே கால் பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பட்டாபிராமில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை