×

சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் நியமனம்

சாத்தான்குளம், செப்.30: நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினராக கலுங்குவிளையைச் சேர்ந்த போனிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் அருகேயுள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் போனிபாஸ். கனிமொழி எம்.பி., பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினராக இவரை கலெக்டர் சந்தீப் நந்தூரி நியமனம் செய்து அறிவித்துள்ளார். இதையடுத்து போனிபாஸிக்கு, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப், நகரச் செயலாளர் இளங்கோ, ஒன்றியக்குழு உறுப்பினர் ப்ரெனிலாகார்மல் போனிபாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

Tags : Road Safety Consumer Committee ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு