×

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குளத்தூர், செப்.30: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கூட்டணி கட்சியினர் சூரங்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து தலைமை வகித்தார். மதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிராஜ், காங்கிரஸ் கட்சி ஒன்றிய தலைவர் சுரேஷ், மார்க்சிஸ்ட் மாவட்டத்தலைவர் பேச்சிமுத்து, இந்திய கம்யூ. ஒன்றிய தலைவர் முனியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மதன், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கண்ணன், தமிழ்புலிகள் ஒன்றிய செயலாளர் முத்துராஜன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, மாவட்ட சிறுபான்மையினர் அணி சாஹீர்உசைன், மாவட்ட கவுன்சிலர் மிக்கேல்நவமணி, மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் அந்தோனிராஜ், மாதவடியான், மாவட்ட மகளிரணி எப்ரோ மீனாமேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், செல்வமணி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் வேம்பார் தெற்கு ஆரோக்கியராஜ், சூரங்குடி வேல்த்தாய், ராமசுப்பிரமணியன், எம்.சண்முகபுரம் சித்திரைவேல், ஒன்றிய இளைஞரணி கனகராஜ், வேல்முருகன், அருள்துதி, ஒன்றிய சிறுபான்மையினர் அணி தர்மநேசசெல்வின், ஒன்றிய தொண்டரணி வைப்பார் பாலமுருகன் ஆதித்தன் மற்றும் கூட்டணி கட்சி கிளை நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி: புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து காயல்பட்டினத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர பொருளாளர் தாஜ்ஜீதீன் தலைமை வகித்தார். நகர செயலாளர் முத்து முஹம்மது, நகர காங்கிரஸ் தலைவர் முத்துவாப்பா, மார்க்சிஸ்ட் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மன்னர் பாதுல் அஷ்ரப், நகர செயலாளர் அபுசாலி, மதிமுக மாவட்ட பொருளாளார் அமானுல்லா, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஹசன், திமுக நகர துணை செயலாளர் கதிரவன், இளைஞர் அணி செயலாளர் கலீல் ரஹ்மான், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடை சுகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 ஆறுமுகநேரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகர செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். காங்கிரஸ் நகர தலைவர் ராஜாமணி, காங். மாவட்ட துணைதலைவர் எஸ்.டி. சண்முகம், விடுதலை சிறுத்தை வெள்ளத்துரை, ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெங்கடேசன், முன்னாள் வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் சுப்பிரமணியம், இந்திய கம்யூ. ராமநாதன், மதிமுக நகர செயலாளர் முருகன், விடுதலைசிறுத்தை தமிழ்குட்டி, மதிமுக அவைத்தலைவர் சுடலையாண்டி, திமுக மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் முத்தீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 ஆத்தூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர திமுக பொறுப்பாளர் முருகபெருமாள் தலைமை வகித்தார். விவசாய அணி துணை அமைப்பாளர் மாணிக்கவாசகம், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கோபி, காங்கிரஸ் இளைஞரணி ராம்குமார், திமுக அவைத்தலைவர்அப்துல்காதர், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் தேவாரம், இந்திய கம்யூ. நகர செயலாளர் மணிமுத்து, ஆதிதமிழர் பேரவை மாநில துணை பொதுசெயலாளர் அருந்ததி அரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.    வைகுண்டம்: வைகுண்டம் ஒன்றியம் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள் தலைமை வகித்தார். மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜகோபால், திமுக ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் பெருமாள், வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், சிவலிங்கராஜா பேருர் ஊராட்சி செயலாளர் சுப்புராஜ், இளைஞர் அணி அருண்கிருஷ்ணன், விவசாய தொழிலாளர் அமைப்பு செயலாளர் சின்னபாண்டி, துணைசெயலாளர் கோபி, பெரியகுளம் நகர செயலாளர் சுடலை, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சிவக்குமார். தொழில் நுட்ப அணி பத்தரகாளி முத்து, காங்கிரஸ் சார்பில் நகர செயலாளர் சித்திரை, ஐஎன்டியுசி சந்திரன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் சிவகளை பிச்சையா, மதிமுக நகர செயலாளர் வள்ளிமுத்து, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலர் ராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    செய்துங்கநல்லூர்: கருங்குளம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செய்துங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இசக்கி பாண்டியன் தலைமை வகித்தார். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, காங்கிரஸ்  வட்டார தலைவர் புங்கன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோத்தி,  மதிமுக ஒன்றியசெயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு  துணைசெயலாளர்  டாக்டர்  கலீல்ரகுமான்,  முன்னாள் அவைத்தலைவர் பட்டன், முன்னாள் சேர்மன்  சுடலைபாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பரமசிவம், தெற்கு மாவட்ட  ஒன்றிய  மகளிர் அணி விஜிலா, பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சுடலைமணி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன், தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய செயலாளர் பாலாமணி, கருங்குளம் தெற்கு நகர இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் கொம்பையா, ரெங்கன், ஷேக் அப்துல்காதர், இளைஞரணி  ஜிந்தா மற்றும் மதிமுக சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுடலை, காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு இளைஞரணி தலைவர் சித்தார்த், மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீரான் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பஸ் நிலையத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு ஒன்றிய திமுகசெயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். ஒன்றிய மதிமுக செயலாளர் பலவேசபாண்டியன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய விடுதலை சிறுத்தைகட்சி செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுந்தரகணபதி, நகர மனித நேய மக்கள் கட்சி செயலாளர் உசேன், ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் பிரிட்டோ, நயினார், நகரகாங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் வேணுகோபால், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மாவட்ட மதிமுக கலைபிரிவு செயலாளர் மகராஜன், மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு அமைப்பாளர் சுகுமாறன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய மனித நேய மக்கள் கட்சி செயலாளர் தவுபிக் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய பொருளாளர் சுந்தர், நகர மதிமுக செயலாளர் ஜெயராஜ், நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜகோபால், ஒன்றிய திமுக பொருளாளர் வேல்துரை, மாவட்ட பிரதிநிதி சரவணன், நகர இளைஞரணி செயலாளர் முருகன், மணிகண்டன், ஒன்றிய மதிமுக மாணவரணி செயலாளர் ரவிசந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags : DMK ,alliance protests ,Thoothukudi district ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...