கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் ₹63 லட்சம் வசூல்

விக்கிரவாண்டி, செப். 30: மத்திய அரசு பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் இரண்டு ஏக்கர் அளவிற்கு விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஆண்டு க்கு தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக ரூபாய் 6000 வழங்குகிறது. இந்த திட்டத்தினை விவசாயிகள் அல்லாத சிலர் முறைகேடாக தனியார் நெட் சென்டரில் ஆவணங்களை பதிவு செய்து நிதி உதவி பெற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம்பேர் நிதி உதவி முறைகேடாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் திருச்சி மாவட்ட உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் செல்வம் தலைமையில் தாசில்தார் தமிழ்ச்செல்வி, வேளாண்மை உதவி இயக்குனர் டாக்டர் மாதவன், வேளாண்மை அலுவலர்கள் ஜோதிமணி, பிரகாஷ், சரண்ராஜ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி வட்டாரத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 150 பேர் போலியான ஆவணங்களை தந்து அரசு நிதி உதவி பெற்றது தெரியவந்தது.விக்கிரவாண்டி வட்டாரத்தில் முறைகேடாக பணத்தை வசூல் செய்ய ஆறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு அந்த குழுவினர்விவசாயிகளிடம் நேரடியாக சென்று ரூபாய் 63 லட்சத்தை வசூல் செய்து அரசு கணக்கில் செலுத்தியுள்ளனர்.

Related Stories:

>