×

பள்ளிபாளையம் தறிப்பட்டறை உரிமையாளர்களுக்கு அபராதம்

பள்ளிபாளையம், செப்.30: பள்ளிபாளையம் பகுதியில், நகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையிலான அலுவலர்கள் வியாபார நிறுவனங்கள், விசைத்தறி கூடங்களில் கொரோனா ஊரடங்கு நடைமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தால் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் குறித்து நேரடியாக பார்வையிட்டனர். மொத்தம் 22 வணிக நிறுவனங்கள், 16 தறிப்பட்டறைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவாறு, அலட்சியமாக இருந்ததாக 12 நிறுவனங்கள் மற்றும் தறிப்பட்டறைகளின் உரிமையாளர்களுக்கு ₹22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : school workshop owners ,
× RELATED ஆன்லைன் சட்டத்தை தவறாக பயன்படுத்தி...