×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு ₹2.45 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

கிருஷ்ணகிரி, செப்.30: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநில சிறுபான்மையினர் நல ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில சிறுபான்மையின ஆணைய தலைவர் ஜான் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆணைய உறுப்பினர் செயலர் சுரேஷ்குமார், சிறுபான்மையின மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினார். கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, மாவட்ட எஸ்.பி. பண்டிகங்காதர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி வரவேற்றார். கூட்டத்தில், 97 பயனாளிகளுக்கு ₹15 லட்சத்து 28,750 மதிப்புள்ள நல உதவிகளை சிறுபான்மை ஆணைய தலைவர் வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘2020-21ம் ஆண்டிற்கு ₹2.45 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை ₹96.47 லட்சத்திற்கான கடனுதவி வழங்க விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டு டாம்கோ கழகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை நவம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவேற்ற, வட்டந்தோறும் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்,’ என்றார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையின அமைப்புகளின் தலைவர்களிடம், குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பெரியசாமி, ஆர்டிஓக்கள் கற்பகவள்ளி, குணசேகரன், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் அமீர்பாஷா, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க பிரதிநிதி ஹபீசுல்லா, கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க பிரதிநிதி சுமிதா ஜாஸ்மின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Krishnagiri district ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...