×

அரூர் அருகே சர்வர் பிரச்னை ரேஷன் கடையில் பொருட்கள் பெறமுடியாமல் மக்கள் அவதி

அரூர், செப்.30: அரூர் அருகே  சடையம்பட்டி கிராமத்தில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையில், மொத்தம் 299 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் ரேஷன் கடை திறந்து பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசு ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சடையம்பட்டி கிராமத்தில் இணையதளம் (டவர்லைன்)  கிடைக்காததால் கடந்த 25 நாட்களாக ரேஷன் பொருட்களை கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஊழியர்கள் இயந்திரத்தை தூக்கிக்கொண்டு டவர் எங்கு கிடைக்கிறதோ அங்கேயே நின்று கார்டுகளுக்கு பதிவுசெய்து பில் கொடுத்து, அனுப்பி வைக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து கிராம மக்களும் பின்னே செல்கின்றனர். நேற்று ஒரு கி.மீ தொலைவில் சிக்னல் டவர் கிடைத்ததால், கிராம மக்கள் அந்த இடத்தில் வரிசையில் நின்று கார்டை பதிவு செய்து பில் போட்டு பொருட்களை வாங்கி வீட்டுக்கு சென்றனர். சுமார் ஒரு கிமீ தூரம் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டனர். நேற்று வரை 160 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையை விரைவில் சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Arur People ,ration shop ,
× RELATED குத்துக்கல்வலசை வேதபுதூரில் புதிய ரேஷன் கடைக்கு அடிக்கல் நாட்டு விழா