திருவில்லிபுத்தூர் சர்ச் பாயிண்ட் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் ‘அவுட்’ வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

திருவில்லிபுத்தூர், செப். 30: திருவில்லிபுத்தூர் சர்ச் பாயிண்ட் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவில்லிபுத்தூரில் நகரின் மையப் பகுதியான சர்ச் பாயிண்ட், எல்ஐசி அலுவலகம் அருகில் மற்றும் ராமகிருஷ்ணாபுரத்தில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நகரின் முக்கிய சந்திப்பு பகுதியான சர்ச் பாயிண்ட்டில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. சிவகாசி மற்றும் ராஜபாளையத்திலிருந்து திருவில்லிபுத்தூருக்கும், நகரிலிருந்து வெளியூர் செல்லும் வாகனங்களுக்கும் சர்ச் பாயிண்ட் வழியாக சென்று வருகின்றன. 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து உள்ள இந்த முக்கிய சந்திப்பில் சிக்னல் செயல்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காட்சிப் பொருளாக இருக்கும் போக்குவரத்து சிக்னலை சீரமைக்க, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவில்லிபுத்தூர் நகரப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>