×

கேரள எல்லைகளை திறக்கக்கோரி முற்றுகை


கம்பம், செப்.30: தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் மாநில எல்லைகளை திறக்கக்கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கம்பமெட்டு சாலையில், நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் ஹாரூண் ரசீத் கண்டன உரையாற்றினார். கம்பமெட்டு சாலை வழியாக சுமார் ஒரு கி.மீ தூரம் நடந்து கம்பமெட்டுக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். புறவழிச்சாலை அருகே சுமார் அரைமணி நேரம் எல்லைகளை திறக்க கோரி கோசங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ‘பொதுப்போக்குவரத்தை அனுமதித்த தமிழக, கேரள அரசுகள் தேனி மாவட்டத்தில் இருந்து கேராளா செல்லும் ஏலத்தோட்ட விவசாயிகள், தொழிலாளர்களை மட்டும் அனுமதிக்காதது ஏன்? சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களை கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. கம்பம் வடக்குகாவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கீதா, போக்குவரத்து ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Siege ,borders ,Kerala ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...