×

கொரோனா ஊரடங்கால் இளநீர் விற்பனை பாதிப்பு

தேவதானப்பட்டி, செப். 30: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தேவதானப்பட்டி, காட்ரோடு, டம்டம்பாறை வழியாகச் செல்கின்றனர். இதில், காட்ரோட்டில் இருந்து கெங்குவார்பட்டி கம்பெனி பிரிவு வரை ஏராளமான இளநீர் கடைகள் உள்ளன. கொடைக்கானல் செல்பவர்கள், இளநீர் கடைகள் முன்பு வாகனங்களை நிறுத்திவிட்டு இளநீர் குடித்து விட்டுச் செல்வர். இந்த வியாபாரத்தை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாதமாக இளநீர் கடைகள் மூடப்பட்டு, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், காட்ரோடு சாலையில், மீண்டும் இளநீர் வியாபாரம் தொடங்கியுள்ளது. ஆனால், கடனை வாங்கி மீண்டும் தொழிலை தொடங்கியுள்ள நிலையில், வியாபாரம் மந்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது