×

பனை விதை நடும் விழா

காரைக்குடி, செப்.30:  காரைக்குடி அருகே இலுப்பக்குடி சேங்கை கண்மாய் கரை ஓரங்களில் நமது உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது. நமது உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் டாக்டர் பிரகாஷ் வரவேற்றார். சாக்கோட்டை ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் துவக்கி வைத்தார். இதில் வரும் நாட்களில் பருவ மழையை பயன்படுத்தி தூர்வாரப்பட்ட கண்மாய்கரை ஓரங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Tags : Palm Seed Planting Ceremony ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே பனை விதை நடும் விழா