×

கோர்ட் வளாக கட்டுமான பணி நிறைவு


திருப்பூர், செப்.30: திருப்பூரில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாக கட்டுமான பணி நிறைவு பெற்று உட்கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. திருப்பூர் குமரன் ரோட்டில் மாவட்ட உரிமையியல் கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் உள்ளிட்ட கோர்ட்டுகள் உள்ளன. கடந்த 2013ல் திருப்பூரில், மாவட்ட கோர்ட் துவங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கோர்ட், மகிளா கோர்ட், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு கோர்ட் ஆகியவை துவங்கப்பட்டது. இவை, லட்சுமிநகரில் உள்ள தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. சப்-கோர்ட், மாஜிஸ்திரேட் கோர்ட் ஆகியவை, குமரன் ரோடு வளாகத்தில் செயல்படுகின்றன. கோர்ட்டுகள் இரு வேறு இடங்களில் செயல்படுவதால், பல நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. இதைத்விர்க்க, பல்லடம் ரோட்டில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, அங்கு, ஒருங்கிணைந்த கோர்ட் வளாக கட்டிடம் கட்டும் பணி கடந்த 2017ல் துவங்கப்பட்டது.

34 கோடி ரூபாய் செலவில், கடந்த மூன்றாண்டாக நடந்த கட்டுமான பணி, தற்போது நிறைவடைந்துள்ளது. மொத்தம், 1.65 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், தரை தளம் மற்றும் முதல் தளத்தில், கோர்ட் அரங்குகள், நீதிபதி அறை, அலுவலக அறை, கைதிகள் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சமரச மையம் (மாற்று முறை தீர்ப்பு மையம்) அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில், மாவட்ட கோர்ட், முதல் தளத்தில் குற்றவியல் நடுவர் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர், கூடுதல் மாவட்ட கோர்ட் செயல்பட உள்ளன. கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது உட்கட்டமைப்பு பணி நடந்து வருகிறது.

Tags : court premises ,
× RELATED உத்தமபாளையம் நீதிமன்ற வளாகத்தில்...