×

டிப்பர் லாரி ஓட்டுனர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர், செப்.30: திருப்பூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக தற்காலிகமாக மணல் குவாரி அமைத்து மணல் எடுக்க அனுமதி அளிக்க கோரி டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தவிர்க்கும் வகையில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மணல் எடுக்கவும், கிராவல் மண் ஏற்றி போக்குவரத்து செய்யவும் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களாகிய நாங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளோம். திருப்பூரில் முறையான அனுமதி பெற்ற மணல் குவாரிகள் இல்லாததால் மாவட்ட நிர்வாகம் தாலுகா வாரியாக தற்காலிகமாக மணல் குவாரிகள் அமைத்து மணல் எடுக்க அனுமதி அளித்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : Tipper ,truck drivers ,collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...