×

வழிகாட்டி பலகை சீரமைப்பு

ஊட்டி, செப். 30: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள வழிகாட்டி பலகை நகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள், எவ்வித இடைஞ்சலும் இன்றி சுற்றுலா தலங்களுக்கு செல்ல வசதியாக ஊட்டி நகரின் பல இடங்களில் சுற்றுலா தலங்கள் குறித்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

சேரிங்கிராஸ் பகுதியில் பெரியார் நினைவுத்தூண் அருகே அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகையில் சுற்றுலா தலங்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் அழிந்து போய் காணப்பட்டன. இதனை சரி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சி சார்பில் வழிகாட்டி பலகையில் உள்ள சேதமடைந்த எழுத்துக்கள் சீரமைக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அமைக்கப்பட்டு புதுப்பொலிவுபடுத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனா பரிசோதனை 2 லட்சத்தை கடந்தது