×

மன்னார்புரம் ஜெபமாலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நெல்லை, செப். 29:  மன்னார்புரம் தூய ஜெபமாலை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திசையன்விளை அருகே மன்னார்புரத்தில் தூய ஜெபமாலை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று காலை திருப்பலியையடுத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை கொழுந்தட்டு பங்குத்தந்தை இருதயராஜ் அர்ச்சித்து ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் ஏர்வாடி பங்குத்தந்தை கிராசிஸ் உட்பட பலர் சமூக விலகலுடன் கலந்து கொண்டனர். திருவிழாவில் 10 நாட்களும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வரும் 6ம் தேதி 9ம் திருவிழாவன்று சிறப்பு மாலை ஆராதனை, அன்னையின் தேர்பவனி நடக்கிறது. 7ம் தேதி காலை திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயராஜ்வல்தாரிஸ், அருட்சகோதரிகள், பங்கு பேரவை நிதிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Mannarpuram Rosary Mata Temple Festival ,
× RELATED சிவகாசியில் ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்