×

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கியது பலி எண்ணிக்கை 216 ஆனது

கடலூர், செப். 29: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  இரண்டு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு  19,849 ஆனது. இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்து 4 பேர் இறந்த நிலையில் நோய்த் தொற்றால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 216 ஆனது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 162 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,849 ஆனது. நேற்று 168 பேர்  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 18,136 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று  விருத்தாசலத்தை சேர்ந்த 76 வயது ஆண் சிதம்பரத்தைச் சேர்ந்த 22 வயது ஆண், புவனகிரியை சேர்ந்த 60 வயது ஆண், பண்ருட்டியை சேர்ந்த 79 வயது ஆண் என நான்கு பேர் இறந்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 4 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 216 ஆனது.  5, 511 பேரின் பரிசோதனை முடிவுகள் காத்திருப்பில் உள்ளது.மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 1,344 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 153 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 97ஆயிரத்து 193 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 88 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cuddalore district ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்