×

இலங்கை ஏற்க மறுத்து இந்தியாவை அவமதிக்கிறது ராமதாஸ் கண்டனம்

விழுப்புரம், செப். 29: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்தியா - இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26ம் தேதி இணையவழியில் பேச்சு நடத்தினார்கள்.  அப்போது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளை செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.  அதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் ஏற்றுக்கொண்டார். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்களுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை இலங்கை அரசு அதன் அறிக்கையில் தவிர்த்திருப்பதன் மூலம் இந்தியாவை அவமானப்படுத்தியிருக்கிறது. எனவே, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Tags : Ramadas ,Sri Lanka ,India ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...