×

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கலெக்டர் ஆய்வு

ஊட்டி,செப்.29: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 650 வாக்குசாவடிகள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குபதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படும். இயந்திரங்கள் உள்ள அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டு, அவை பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.

இதன் ஒரு பகுதியாக கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ஊட்டி சப்.கலெக்டர் மோனிகா ரானா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags : Collector inspection ,room ,
× RELATED பூமார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு