×

கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இரட்டை முக கவசங்கள் அணிய அறிவுரை

ஊட்டி,செப்.29: கொரோ னா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட அரசு பஸ் போக்குவரத்து கடந்த 1ம் தேதி முதல் துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மண்டலத்தில் உள்ள 6 கிளைகளில் இருந்து அனைத்து சமவெளி பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு மிக குறைந்த அளவிலான பஸ்களே இயக்கப்படுகிறது. கிராமங்களுக்கு செல்லும் பஸ்களில் தனிமனித இடைவெளி கடைபிடிக்க முடியாத அளவிற்கு கூட்டம் காணப்படுகிறது. இதனிடையே நீலகிரியில் போக்குவரத்து கழகம் எவ்விதமான கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. கிருமி நாசினிகள் தெளிக்காமல் ெவறுமனே பெயரளவிற்கு பஸ்களை கழுவி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் நீலகிரியில் சுமார் 40க்கும் மேற்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பஸ்களை இயக்க தயக்கம் காட்டினார்கள். இதனிடையே அரசு பஸ்களை கிருமி நாசினி கொண்டு கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இரட்டை முக கவசம் அணிய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், அரசு பஸ்களில் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக கூட்டம் நடத்தப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் கிருமி நாசினிகள் வழங்க வேண்டும். அனைத்து பஸ்களிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கட்டாயமாக இரட்டை முக கவசம் அணிய வேண்டும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயமாக முக கவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும். பஸ்களில் ஏறும் போது கைப்பிடிகள், கம்பிகள் போன்றவற்றை பிடிக்கும் போது கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். என்றார்.

Tags : Government bus driver ,conductors ,
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது