×

வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தொண்டாமுத்தூர், செப். 29:  மத்திய அரசின்  வேளாண் மசோதாக்களை கண்டித்து தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியத்தில் தாளியூர், தொண்டாமுத்தூர், வேடபட்டியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் ரவி தலைமை வகித்தார்.   தொண்டாமுத்தூர் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் செல்வமணி, பேரூர் கழக செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். தாளியூர் பேரூர் கழகத்தில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் தியாகராஜன் மற்றும் நகர செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். வேடபட்டியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் கார்த்திகேயன், பேரூர் கழக செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர்.   இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான கந்தசாமி பேசினார்.

தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றியம்: தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சாமி பையன் தலைமையில் பூலுவபட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில். எஸ்ஆர் வைரவேல், ம.தி.மு.க. ரவி, கம்யூனிஸ்ட் இளங்கோ, வி.சி.க. குப்புசாமி, மகேஷ் குமார், ரங்கசாமி, செந்தில்குமார், மோகன் குமார், ஆறுமுகம், அம்மு பிரகாஷ், ஆடிட்டர் பழனிசாமி, இளைஞரணி பார்த்திபன், குருபிரசாத், உதயமூர்த்தி, விநாயகமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். வடவள்ளி: வடவள்ளி பகுதி கழக தி.மு.க. சார்பில் வடவள்ளியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி கழக பொறுப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, குப்புசாமி, மகாலட்சுமி, மகளிரணி சரஸ்வதி, கார்த்திகேயன், வக்கீல் சுந்தர்ராஜ், காங்கிரஸ் காந்தி, பாலு, இந்திய கம்யூனிஸ்ட் தங்கவேலு, மா.கம்யூ. சார்பில் ஜெயபால், மணி, தி.க. சார்பில் அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துடியலூர்: துடியலூர் பகுதி தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி பொறுப்பாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். பழனியப்பன், சி.டி.சி ராஜா முன்னிலை வகித்தனர். இதில் பங்ேகற்ற திமு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் காய்கறி மாலை அணிந்து மத்திய மாநில அரசுகளுக்கு  எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.  வட்ட கழக செயலாளர்கள் பிரபாகரன், சந்திரசேகரன், ராஜசேகரன், சுந்தரம், சண்முகம், பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரேவதி, ஆனந்தன், ஈஸ்வரன், ராக்கி முத்து, சாமிநாதன், மணி, திமுக கழக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மணி விஜயகுமார், ஜோதிபாசு, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் விஜயா, ரங்கராஜ், செந்தில் குமார், பழனிச்சாமி, சிவசாமி, கிருஷ்ணன், காங்கிரஸ் நிர்வாகிகள், பச்சமுத்து, பொன்னுசாமி, சின்னு ராமகிருஷ்ணன், சிங்காரவேலன், ம.தி.மு.க நிர்வாகிகள் காளிச்சாமி, பழனிச்சாமி, தங்கவேல், சிவசங்கர், கொங்கு நாடு தேசிய கட்சி பரமேஷ்வரன், வித்யா, எஸ்.டி.பி.ஐ பாட்ஷா சுலைமான், வி.சி.க. கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

வீரபாண்டி பிரிவு:  வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வீரபாண்டி பிரிவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அறிவரசு தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், அறிவரசு ஆகியோர் மாட்டு வண்டியில் தி.மு.க கொடியை பிடித்தபடி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அகில் சந்திரசேகரன், நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சின்னராஜ், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரமடை: தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை பேரூர் கழகத்தில் கார் ஸ்டாண்ட் முன்பாக பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

 போராட்டக் குழு பொறுப்பாளர் தி.மு.க. அப்துல் ரகுமான். மூத்த உறுப்பினர் தேக்கம்பட்டி 104 வயது பாப்பம்மா பாட்டி மற்றும் காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் துரைசாமி மற்றும் ராஜேந்திரன், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருமாள், ராஜலட்சுமி, தங்கவேல், ம.தி.மு.க சார்பில் சுந்தரம், ஜேசுதாஸ் என 200க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர். ஏர் கலப்பை மாட்டு வண்டியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி நால்ரோட்டில் தி.மு.க. கிழக்கு மாவட்டம்  மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சூலூர் ஒன்றிய கிழக்கு மாவட்ட செயலாளர்  நித்தியா மனோகரன் தலைமை வகித்தார்.  தி.மு.க. சார்பில் கொள்ளுபாளையம் ராமசாமி,  கங்காதரமூர்த்தி, நாகராஜ், அப்பாஸ், சண்முகம், காங்கிரஸ் கட்சியின் கோவை  மாவட்ட பொருளாளர் கணேசமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன்,  கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் விஎம்சி. சந்திரசேகரன், கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சியின், கிழக்கு மாவட்ட செயலாளர் பிரிமியர்செல்வம், பொருளாளர்  செதுராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் 600க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

அன்னூர்: அன்னூர் பயணியர் மாளிகை முன் பேருந்து நிலையம் அருகில் அன்னூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் அன்னூர்  நடராஜன், நகர பொறுப்பாளர் ரகமத்துல்லா, அன்னூர் ஒன்றிய துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி, அன்னூர் ஒன்றிய துணைச் செயலாளர் மோகனசுந்தரம், காங்கிரஸ்  மாநில பொதுக்குழு உறுப்பினர் சவுந்தரராஜன், மாநில பேச்சாளர் காளிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முகமது முசீர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பாலு மகேந்திரா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வடக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ஈஸ்வரன், சிவசாமி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைசாமி, நசீர், மற்றும் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் பங்கேற்றனர்.

சூலூர்: சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் திருச்சி ரோடு பாப்பம்பட்டி பிரிவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் முன்னிலை வகித்தார். தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏர்கலப்பை, மாடு, மாட்டு வண்டி மற்றும் குதிரைகளுடன் பங்கேற்றனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கண்ணம்பாளையம் சண்முகம், இந்திய கம்யூ. சார்பில் மவுனசாமி, மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் ஆறுச்சாமி, காங்கிரஸ் சார்பில் ராயல்மணி, வெங்கிடுபதி, சிவாஜி கந்தசாமி, செல்வராஜ், பூபதி  சுரேஷ்குமார், பாலாஜி, கொமதேக சார்பில் முருகசாமி, விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரவி, பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார், செல்வராஜ், பீடம்பள்ளி முருகேஷ், சுரேஷ்,  செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர் ரகு, செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.  

சூலூர் மேற்கு ஒன்றியம் சார்பில் சூலூர் அண்ணா கலையரங்கில் ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் இருகூர் சந்திரன், கபிலன், ஜெகநாதன், நகர செயலாளர் சோலை கணேசன் ம.தி.மு.க.வை சேர்ந்த கருணாநிதி மற்றும் விடுதலை சிறுத்தைகள், த.மு.மு.க.  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் சன்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சி.என்.ராஜன், முத்துலிங்கம், காங்கிரஸ் சார்பில் தீரன்கந்தசாமி, கொ.ம.தே.க. சார்பில் சிவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் தேவராஜ், இந்திய கம்யூ. சார்பில் ஆறுமுகம் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,withdrawal ,bills Coalition parties ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...