×

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 50 இடங்களில் தி.மு.க. கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, செப். 29: மத்திய  அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஈரோடு  மாவட்டத்தில் 50 இடங்களில் நேற்று தி.மு.க. கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் விவசாயிகள் காளைமாடுகள், ஏர்கலப்பையுடன் கலந்து  கொண்டனர்.
   நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண்  விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை  கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த  மசோதா ஆகிய 3 மசோதாக்களை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மத்திய  அரசு நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு குடியரசு தலைவரும் ஒப்புதல்  அளித்துள்ளார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளதாக கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளை பாதிக்க செய்யும் இந்த  மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெறக்கோரியும், மசோதா நிறைவேற ஆதரவு  தெரிவித்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் நேற்று மாநிலம் தழுவிய அளவில் தி.மு.க.  மற்றும் கூட்டணி கட்சிகள், விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் 50 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம்  நடந்தது. ஈரோடு ரயில் நிலையம், மணல்மேட்டில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட  தி.மு.க அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நேற்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி,  காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரவி, இ.கம்யூனிஸ்ட் ஸ்டாலின் குணசேகரன்,  மார்க்சிஸ்ட் துரைராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் முருகன், விடுதலை  சிறுத்தைகள் பாஸ்கர், கொ.ம.தே.க. மாநில பொருளாளர் பாலு, திராவிடர் கழகம்  சண்முகம், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன்,  அந்தியூர் செல்வராசு, மாநில நிர்வாகிகள் சச்சிதானந்தம், கந்தசாமி, ஈரோடு  இறைவன், மாவட்ட நிர்வாகிகள் குமார்முருகேஷ், செந்தில்குமார், பழனிசாமி,  செல்லப்பொன்னி, சின்னையன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மாநகர  செயாளர் சுப்பிரமணி, முன்னாள் நகர செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர்  ராமச்சந்திரன், திண்டல் குமாரசாமி, திராவிடர் விடுதலை கழகம் ரத்தினசாமி  உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், விவசாயிகள், பொதுநல அமைப்புகளை சேர்ந்த  ஏராளமானோர் கலந்து கொண்டு வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி கோஷமிட்டனர்.  

  இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகள் காளைமாடுகள், ஏர் கலப்பை மற்றும்  நெல் நாற்றுகளுடன் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் 50 இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக கட்சி நிர்வாகிகள் கூறினர். கோபி: ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோபி, கொளப்பலூர் உள்ளிட்ட 22 இடங்களில் மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் தலைமையிலும், நம்பியூரில் ஒன்றிய  செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையிலும், கொங்கர்பாளையத்தில் சண்முகம் தலைமையில், டி.என்.பாளையத்தில் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, பொருளாளர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிறுவலூர் வெள்ளியங்கிரி, ஐடிவிங் செந்தில்குமார், நகர செயலாளர் நாகராஜ், தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க தலைவர் கே.கே.செல்வன், கட்சி நிர்வாகிகள் மெய்யழகன், கணேசன், அளுக்குளி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி:அவல்பூந்துறை நால்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சு.குணசேகரன் தலைமை தாங்கினார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, வட்டார காங்கிரஸ் தலைவர் முத்துக்குமார், கொ.ம.தே.க. மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகம், அவல்பூந்துறை பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மொடக்குறிச்சியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தனசேகர், பேரூர் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அரச்சலூரில் மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லக்காபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லக்காபுரம் தி.மு.க. ஊராட்சி செயலாளர் உதயகுமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். கணபதிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மூர்த்தி (எ) பழனிவேல்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கருமாண்டாம்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

கொடுமுடியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம். பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவகிரியில் கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் கோபால் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
பவானி: பவானி அந்தியூர் பிரிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது தலைமை தாங்கினார். பவானி நகர தி.மு.க. செயலாளர் நாகராஜன், ஈரோடு வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கே.சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ்.சேகர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் பி.கே.பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.

  காங்கிரஸ் நகரத் தலைவர் கதிர்வேல், சி.பி.ஐ. நகரச் செயலாளர் பாலமுருகன், சி.பி.எம். தாலுகா செயலாளர் ஜெகநாதன், தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் பவானி எஸ்.கண்ணன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜம்பையில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்மாபேட்டையில் திராவிடர் கழக மண்டல செயலாளர் பிரகலாதன் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சரவணன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் என்.பி.சேகர், பேரூர் செயலாளர் பெரியநாயகம் மற்றும் கூட்டணி கட்சியினர், தி.மு.க. நிர்வாகிகள் சுரேஷ், ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,places ,demonstration ,Coalition ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி