×

திருச்செங்கோட்டில் அனைத்துக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மாட்டு வண்டி, கரும்புகளுடன் பங்கேற்ற நிர்வாகிகள்

திருச்செங்கோடு, செப்.29: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து, திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை முன்பு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுராசெந்தில், நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணமுருகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் நடேசன், ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜபாண்டி ராஜவேலு, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால், நகர தலைவர் சர்வேயர் செல்வகுமார், மதிமுக மாவட்ட செயலாளர் குருசாமி, கொமதேக மாவட்ட தலைவர் நதி ராஜவேல், இந்திய கம்யூனிஸ்ட் மணிவேல், மார்க்சிஸ்ட் ரங்கசாமி, விசிக மாவட்ட செயலாளர் காமராஜ், ஆதித்தமிழர் பேரவை செல்வவில்லாளன், சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மாட்டுவண்டி, டிராக்டர், கரும்புகளுடன் வந்தனர். எலச்சிபாளையத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல், மார்க்சிஸ்ட் செயலாளர் சுரேஷ், இ.கம்யூனிஸ்ட் அன்புமணி, காங்கிரஸ் தங்கராசு, கொமதேக பூபதி பங்கேற்றனர். மல்லசமுத்திரத்தில் ஒன்றிய செயலாளர் பழனிவேலு, பேரூர் செயலாளர் திருமலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதேபோல், கபிலர்மலை மற்றும் பரமத்தி ஒன்றிய திமுக மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில், ஜேடர்பாளையம் நான்கு ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சண்முகம் வரவேற்றார். காங்கிரஸ் நடராஜன், மதிமுக மணி, மார்க்சிஸ்ட் தங்கமணி, கொமதேக யோகராஜ், கோபால், ஆதித்தமிழர் பேரவை பாலா உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags : Tiruchengode ,parties ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்