வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பங்கேற்பு

நாமக்கல், செப்.29: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து, நாமக்கல்லில் நேற்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்கு துணைபோகும் அதிமுக அரசை கண்டித்தும், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தலைமை வகித்து பேசினார். பின்னர், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில், சின்ராஜ் எம்பி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், மாநில விவசாய தொழிலாளர் அணி இணை செயலாளர் கைலாசம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பழனிசாமி, சட்டதிட்டக்குழு உறுப்பினர் நக்கீரன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன்,  முன்னாள் நகர பொறுப்பாளர் மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், ஒன்றிய செயலாளர்கள் கவுதம், துரைராமசாமி, பழனிவேலு, நவலடி, கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் ஆனந்தன், நகர பொருளாளர் அன்பரசு, துணை செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரன், இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல், துணை அமைப்பாளர்கள் காந்தி, நந்தகுமார், மீனவரணி அமைப்பாளர் சுகுமார், மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ராணி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், மதிமுக அவைத்தலைவர் பழனிசாமி, திராவிடர் கழக மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சேக்நவீத், செழியன், இந்திய கம்யூனிஸ்ட் குழந்தான், விடுதலை சிறுத்தைகள் மணிமாறன், கொமதேக மாதேஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி முத்துராஜா, மமக அகதுல்லா, ஆதிதமிழர் பேரவை மணிமாறன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுகவினர் பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக விவசாய அணியினர் பச்சை துண்டு அணிந்து வந்திருந்தனர். மேலும், கரும்பு மற்றும் வாழைத்தார்களை கொண்டு வந்திருந்தனர்.

Related Stories:

>