×

விஜயகாந்த் குணமடைய தேமுதிகவினர் பால்குட ஊர்வலம்

சேந்தமங்கலம், செப்.29: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் முழுமையாக குணமடைய வேண்டி, சேந்தமங்கலம் ஒன்றிய தேமுதிக சார்பில், பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயன் முன்னிலையில், தேமுதிகவினர் ஆலமரம் பஸ் நிறுத்தத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் சதாசிவம், செயற்குழு உறுப்பினர் ரமேஷ், பேரூர் செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags : Balkuda ,Temujins ,Vijayakanth ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் இன்று...