×

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நாதஸ்வர கலைஞருக்கு பாராட்டு விழா

நாமக்கல், செப்.29: நாமக்கல் மாவட்ட நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் வினோத்கண்ணனுக்கு, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இதையொட்டி, நாமக்கல் அருகே கூலிப்பட்டியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.  இதற்கு முருகன் சன்னதி அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் ஆசிரியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். கோயில் மணியார் கணேசன், கவுரவத் தலைவர் வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் வேல், சங்க ஆலோசகர் தில்லை சிவக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு, கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற வினோத்கண்ணனுக்கு சால்வை அணிவித்து பாராட்டினர். முன்னதாக, பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Tags : Award Ceremony ,Honorary Doctor of Nataswara Artist ,
× RELATED ஆஸ்கர் விருது விழா தள்ளிவைப்பு