×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக, கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தர்மபுரி, செப்.29: தர்மபுரி மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை கண்டித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ‘மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, சட்டமாக்கியுள்ளார். இந்த 3 சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும்,’ என்றார். ஆர்ப்பாட்டத்தில், திமுக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், மதிமுக தங்கராஜ், வீரமணி, விசி ஜெயந்தி, மின்னல்சக்தி, குண்டுசக்தி, திக ஊமைஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் லட்சுமிநாட்டான்மாது மற்றும் திமுக, கூட்டணி கட்சியினர் பச்சை நிற துண்டு அணிந்து கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி-பாலக்கோடு சாலை பழைய ரவுண்டனாவில், ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பச்சைநிற துண்டு அணிந்து கொண்டு, மண்வெட்டி, கடப்பாரை, கலப்பை, நெற்பயிர் ஆகியவற்றையுடன் கலந்து கொண்டனர். திமுக செயலாளர் கேஎஸ்ஆர் சேட்டு தலைமை வகித்தார். திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், ‘மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கைப்பற்றுவார்கள். விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே நிர்ணயம் செய்யும். இதன் மூலம் உழவர்சந்தைகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்,’ என்றார்.

முன்னாள் எம்எல்ஏ மனோகரன், பழைய தர்மபுரி ஊராட்சி மன்றத்தலைவர் சிவலிங்கம், மதிமுக ஆசைபாட்ஷா, சிவபாதம், டாக்டர் பிரபுராஜசேகர், ஆறுமுகம், விவசாய அணி பி.லட்சுமணன், வக்கீல்கள் சக்திவேல், வீரமணி, சர்க்கரை, கந்தசாமி, சர்வேயர் கோவிந்தராஜ், டி.லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, தென்னரசு, சீரங்கமுத்து, வார்டு உறுப்பினர் ஐஸ் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாவட்டத்தில் மொத்தம் 26 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : DMK ,Coalition MPs ,protest ,government ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி