×

திருவண்ணாமலை பெருமாள் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.8 லட்சம் கிடைத்தது

திருவில்லிபுத்தூர், செப். 29: திருவில்லிபுத்தூர் அருகேயுள்ளது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவர். இவ்வாறு வரும் பக்தர்கள் பெருமாளை தரிசித்து விட்டு தங்கள் நேர்த்திக்கடனை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர். இந்த உண்டியல் காணிக்கை உடனடியாக திறந்து எண்ணுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி 2வது சனி விழா முடிவடைந்ததால் நேற்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் உண்டியலகள் திறந்து எண்ணப்பட்டன. இதற்காக கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல் 8, தற்காலிக உண்டியல் 18 என மொத்தம் 27 உண்டியல்கள் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சமூக இடைவெளியுடன் அமர்ந்து உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 676 கிடைத்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் கணேசன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Thiruvannamalai Perumal Temple ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு...