×

வீடுபுகுந்து அச்சுறுத்தும் குரங்கு கூட்டம் நிம்மதியிழந்த காரைக்குடி மக்கள்

காரைக்குடி, செப். 29:  காரைக்குடி நகராட்சிக்கு உட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்கு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செக்காலை வீதிகள், வாட்டர் டேங்க், சுப்பிரமணியபுரம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக வலம் வரும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு பொதுமக்களை விரட்டி கடிக்க வருகின்றன.

பெண்கள் வீட்டை விட்டு வெளியேவந்து கூச்சல் போட்டவுடன் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றன. இந்த தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் பயத்துடனே வீட்டிற்குள் இருக்க வேண்டிய நிலை உள்ளது என பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி செக்காலை பாண்டி கூறுகையில், ‘குரங்கு தொல்லையால் வீட்டிற்குள் இருக்கவே பயமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் மொட்டைமாடியில் முகாமிட்டு அமர்ந்து கொள்கின்றன. இதனால் மாடிக்கு செல்லவே பயமாக உள்ளது. வீட்டிற்குள் எங்காவது ஒளிந்து கொள்வது என பல்வேறு அட்டகாசம் செய்கின்றன. இவைகளை பிடித்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Karaikudi ,group ,home ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!