×

குடியிருப்பு பகுதியில் தேங்கிய கழிவுநீர் டெங்கு அச்சத்தில் மக்கள்

திருப்புத்தூர், செப்.29:  திருப்புத்தூரில் சிவகங்கை சாலை ஓலைப்பட்டியார் வீதியில் குடியிருப்பில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியினர் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்புத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் சிவகங்கை சாலையிலுள்ள ஓலைப்பட்டியார் வீதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கழிவுநீர் வாய்க்கால் மிகவும் சேதமடைந்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நடைபாதையில் தேங்கி நிற்கிறது. இந்த கழிவுநீரை மிதித்து நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மலேரியா, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் நடைபாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து குளம்போல் தேங்குவதோடு மட்டுமல்லாமல் வீட்டிற்கு உள்ளேயும் சென்று விடுகிறது. எனவே இந்த வீதியில் சாலையின் உயரத்தை உயர்த்தி, கால்வாயை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும். இதுபோல் பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடைபாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,
× RELATED வாட்டி வதைக்கும்...