×

வேளாண் மசோதாவை வாபஸ் பெறக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

 சிவகங்கை செப்.29: சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்  மசோதாக்களை வாபஸ் பெறக்கோரியும், மத்திய பாஜக அzரசு மற்றும் ஆதரவளித்த அதிமுக அரசை  கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், சிறு வணிகர்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திருப்புத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், சரவணன், கலைமாமணி உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். காங். மாவட்ட பொருளாளர் பழனியப்பன், இந்திய கம்யூ. மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிய கம்யூ. சார்பில் ஒன்றிய செயலாளர் முருகேசன், மதிமுக நகர் செயலாளர் ராஜ்மோகன் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை அரண்மனைவாசல் முன் திமுக நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், திமுக மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, காங். மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் மற்றும் இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருப்புவனத்தில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாட்டரசன்கோட்டையில் காளையார்கோவில்(வ) ஒன்றிய திமுக பொறுப்பாளர் கென்னடி தலைமை வகித்தார்.

காளையார்கோவில்  பேருந்து நிலையம் அருகே கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி  தலைமையில் ஆயிரம் பேர் கலந்துகொண்ட மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறவமங்கலத்தில்  தெற்கு ஒன்றிய செயலாளர்   யோக கிருஷ்ணகுமார்  தலைமையில் 200  பேர் கலந்துகொண்டனர். இளையான்குடியில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சுப.மதியரசன் தலைமையில், விசிக ஒன்றியச் செயலாளர் ஜேம்ஸ் வளவன், மமக மாவட்டத் தலைவர் துல்கருனை சேட், சிபிஎம் தாலுகா செயலாளர் அழகர்சாமி, காங். வட்டாரத் தலைவர் நாகராஜன் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொன்டனர். மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் எதிரே நகர செயலாளர் பொன்னுச்சாமி தலைமையிலும், காங். மாநில எஸ்சி துறை நிர்வாகி டாக்டர் செல்வராஜ், மதிமுக நகர செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட நிர்வாகி வீரபாண்டி திமுக நகரதுணை செயலாளர் பாலசுந்தரம், திராவிடர் கழக நிர்வாகி ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மானாமதுரை தாலுகா அலுவலகம் எதிரே கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். வட்டார காங். நிர்வாகி ஆரோக்கியதாஸ், மதிமுக ஒன்றிய செயலாளர் அசோக் முன்னிலை வகித்தனர். சிபிஐ கட்சியின் நிர்வாகி ஆறுமுகம், சிபிஎம் கட்சியின் நிர்வாகி ஆண்டி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜாங்கம், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மலைச்சாமி, ராதா, வேல்முருகன், மாவட்ட பிரதிநிதி காளியப்பன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமை வகித்தார். காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கல்லலில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலும், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சின்னத்துரை தலைமையிலும், சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய பொறுப்புகுழு தலைவர் ஆனந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு  நடந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் பூமிநாதன், துணை செயலாளர் சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கொண்டனர். தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு திமுக நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில், சர்வ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவகோட்டை தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் நாகனி ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் நடந்த  ஆர்ப்பாட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில  அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர்.  

Tags : DMK ,alliance parties ,withdrawal ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...